Loading...
  • Admissions Open for 2026-2027. Apply Now. Contact Office: +91-9500475550, 9500496660
  • School reopening date June 3, 2026

பள்ளியில் செயல்பட்டு வரும் சேவா காரியங்கள்

INAUGURATION

1) வித்யா விகாசினி சேவா குழு துவக்கம்

எங்கள் பள்ளியில் சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை இணைத்து வித்யவிகாசினி சேவாகுழு என்னும் பெயரில் பல்வேறு சேவா காரியங்களுக்குத் திட்டமிட்டுள்ளோம் . அதன் துவக்க நிகழ்ச்சி மற்றும் உழவாரப்பணி கடந்த 18.09.2022 அன்று ஈசரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் திரு. தர்மலிங்கம் மற்றும் நிர்வாக அதிகாரி திருமதி. விஜயலெட்சுமி அவர்கள் உட்பட 30 ஆசிரியர்கள் மற்றும் 75 மாணவர்கள் பங்குபெற்று மலைப்பாதையின் இருபுறமும் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

ANNADANAM SERVICE

2) மாதாந்திர பிடி அரிசி திட்டம்

மாணவர்கள் தங்கள் வீடுகளில் சமைக்கும் முன்பு தினசரி ஒரு கைப்பிடி அளவு அரிசியை எடுத்து வைத்து மாதம் ஒரு முறை பள்ளியில் சமர்ப்பிக்கின்றனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட அரிசியை பள்ளியின் சுற்று வட்டாரங்களிலுள்ள ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வழங்கி வருகின்றோம்.

AFFORESTATION

3) பனை விதைகள் குழு

பனை விதைகள் குழு மூலமாக மாணிக்காபுரம் குளம் மற்றும் அலகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1500 பனை விதைகள் நடவு செய்துள்ளோம்.

GREEN CAMPUS

4) ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம்

ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு மரக்கன்று வழங்கி அதனை ஓராண்டுகள் சரியான முறையில் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒரு ஆண்டின் முடிவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்படுகின்றது. இதுவரை சுமார் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

BLOOD DONATION

5) இரத்ததான முகாம்

நம் பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 யூனிட் வரை இரத்தம் சேகரிக்கப்பட்டு சேலம் சிவராம்ஜி இரத்த வங்கி, கோவை விவேகானந்தா இரத்த வங்கி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

CHARITY SERVICE

6) கோடைகால நீர்மோர் பந்தல்

கடந்த ஐந்து ஆண்டுகளாக வள்ளியம்மை நகரில் நம் பள்ளியின் சார்பாக பங்குனி மாதம் முழுவதும் நீர்மோர் பந்தல் சேவை நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

DISASTER RELIEF

7) புயல் வெள்ள நிவாரணப் பணி

உத்தரகாண்ட் வெள்ளம், சென்னை வெள்ளம், காஜா புயல் சமயங்களில் நம் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பாக பல்வேறு பொருட்கள் மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.